பெட்ரோல் மற்றும் டீசலை கடத்திய நபர் கைது

இரண்டு வாகனங்களை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசலை கடத்த முயற்சித்த இரு நபர்களின் நடவடிக்கைகளை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் அதிகாரிகள் முறியடித்தனர்.

நேற்று காலை 7.45 மற்றும் 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனையில், புரோட்டான் வாஜா உட்பட மிட்சுபிஷி பஜெரோ காரிலிருந்து 150 லீட்டர் டீசல் மற்றும் 50 லீட்டர் பெட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

முதல் சோதனையில், உள்ளூர் பதிவு எண்ணை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட புரோட்டான் வாஜா கார் இரண்டு வெவ்வேறு நிலையங்களில் மீண்டும் மீண்டும் பெட்ரோல் நிரப்புவதை கண்டறிந்ததாக கிளந்தான், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

அடுத்த சோதனையில், மிட்சுபிஷி பஜெரோ ரக காரும் உள்ளூர் பதிவு எண்களை கொண்டு அதே நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டெடுக்கப்பட்டதாக அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

இச்சோதனையில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட வேளை இதுக்குறித்து மேல் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அஸ்மான் இஸ்மாயில் தகவல் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்