திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு

கோலாலம்பூர், ஏப்ரல் 26-

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் மகிமா இணை ஏற்பாட்டில் திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு இருநாள் எழில் கமழும் திருநாளாக நாளை ஏப்ரல் 27 ஆம் தேதி சனிக்கிழமையும், 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், பங்குனான் ஸ்ரீ மகா மாரியம்மன், மண்டபம், 5 ஆவது மாடியில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

காலை 9.30 மணிக்கு புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் மாநாடு தொடங்குகிறது. தேவஸ்தான செயலாளர் கு. சேதுபதியின் வரவேற்புரைக்கு பின்னர் ஆதி. சங்கரர் திருமடத்தின் மகேந்திர குருக்களின் ஆசியுரை, ஈப்போ, இசைப் பேரரசி ஸ்ரீமதி யமுனா ஆறுமுகத்தின் இதயம் குளிர்விக்கும் இன்னிசை கச்சேரி நடைபெறும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

முதல் மாநாடு மாலை 6.00 மணியளவில் தேவஸ்தானத்தின் சமயப் பகுதி பொறுப்பாளளர் க. கதிரேசனின் நன்றியுடையுடன் நிறைவு பெறும். இந்ந மாட்டில் மக்கள் திராள கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்