மெனாரா சொன்டொங் வளாகத்தில் ஆரோக்கியமான விழா

தெலுக் இந்தான், ஏப்ரல் 26-

கடந்த ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட தெலுக் இந்தான், சித்திரா பெளர்ணமி திருவிழாவையொட்டி மெனாரா சொன்டொங் வளாகத்தில் Healthy Festivity எனும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

திருவிழாவில் கலந்து கொண்ட பக்த பெருமக்கள் முருகப்பெருமானை வழிபட்டது மட்டுமின்றி தங்களின் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்தவ முகாம் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமை டாக்டர் நரேந்திரன் குணசேகரன் தலைமையில் Persatuan Gaya Hidup Sihat Bagan Datuk எனும் பகான் டத்தோ உடல் ஆரோக்கிய வாழ்வியல் சங்கம் நடத்தியது.

இலவச நீரிழிவு மற்றும் பொது சுகாதாரப் பரிசோதனை, இலவச இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை, LT Vision எனும் கூட்டு நிறுவனத்தின் மூலம் இலவச கண்பார்வை பரிசோதனை, தெலுக் இந்தான் பொது மருத்துவமனையின் உதவியுடன் உடல் உறுப்பு தானப் பதிவு, மேமோகிராம் சோதனை, ஆரோக்கிய நிதி ஆலோசனை முதலிய சேவைகள் இந்த இரண்டு நாள் மருத்துவ முகாமில் வழங்கப்பட்டது.

தவிர கிட்டப்பார்வை பிரச்னையை எதிர்நோக்கியவர்களுக்கு ஆயிரம் இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமிற்கு பேரா மாநில அரசின் மனித வளம், சுகாதாரம் மற்றும் இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்குழு ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் வருகை தந்து பார்வையிட்டது ஓர் உயரிய அங்கீகரமாக கருதப்பட்டது.

இந்த இரண்டு நாள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொது மக்கள் தெய்வ வழிபாடு மட்டுமின்றி தங்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான வழிப்புணர்வை பெறுவதற்கு வகை செய்யப்பட்டது.

அனைவருக்கும் தரமான சுகாதாரத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக இந்த மருத்துவச் சேவை வழங்கப்பட்டதாக டாக்டர் நரேந்திரன் குணசேகரன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்