SST வரியின் புதிய விகிதத்தை அரசு ஆராய வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 5 –

பல்வேறு துறைகளுக்கு ஸ்.ஸ்.தி விற்பனை சேவை வரி வகிதத்தை 6 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தியிருக்கும் அரசாங்கத்தின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சரும், பக்காத்தான் ஹராப்பான் Bagan எம்.பி.யுமான லிம் குவான் எங் கேட்க்கொண்டுள்ளார்.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள ஸ்.ஸ்.திவரியின் புதிய விதத்தினால் மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் சுமை ஏற்றப்பட்டு இருப்பதால் அது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று லிம் குவான் எங் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

ஒரு நாட்டின் பொருளில் வளர்ச்சிக்கு வரி விதிப்பு இன்றியமையாததாகும். ஆனால் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப்பெற்றப் பின்னர் இது போன்ற வரி விதிப்பை அறிமுகப்படுத்தலாம். தற்போதைய சூழ்நிலையில் வரி விதிப்பு உயர்வை அனுமதிக்க வில்லை என்று லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

ஸ்.ஸ்.தி வரி மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான வரி உட்பட அனைத்து வகையான புதிய வரிகளையும் அரசாங்கம் மீள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த வரிகளினால் மக்களுக்கு சுமை ஏற்படும் என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த வரி விதிப்பை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்