தீ விபத்தில் குழந்தைகளின் விளையாட்டு கார்கள் அழிந்தன

அலோர் ஸ்டார், மே 15-

அலோர் ஸ்டார், கம்போங் பாருவில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 விளையாட்டு கார்கள் தீயில் எரிந்து சேதமுற்றன.

ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த விளையாட்டு கார்கள் குழந்தைகளின் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருந்த வேளை, சிறார்களின் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக இருந்து வந்தது.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அலோர் ஸ்டார் தீயணைப்பு, மீட்புத்துறையின் தலைவர் அஹ்மத் நௌஃபல் அப்துல்லா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் விளையாட்டு கார்கள் அனைத்தும் தீயில் கறுகிய நிலையில் கண்டறியப்பட்டதுடன் அவ்விடத்தில் எவரும் இல்லாதது உறுதி செய்யப்பட்டதாக அஹ்மத் நௌஃபல் கூறினார்.

தீ ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஹ்மத் நௌஃபல் இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்