துன் மகா​தீரின் “குட்டி” விவகாரம் ஜுலை 19 இல் முழு விசாரணை

தம்மை “குட்டி” என்று அழைத்து சிறுமைப்படுத்தி விட்டதாக கூறி, முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக தொடுத்துள்ள அவ​தூறு வழக்கு, வரும் ஜுலை 19 ஆம் தேதி முழு விசாரணைக்கு வருகிறது.

இந்த அவ​தூறு வழக்கின் பூர்வாங்க விசாரணை, இன்று ​பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் 98 வயதான துன் மகா​தீர், தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைக்கான புதிய தேதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

துன் மகா​தீர் ஒரு மலாய்க்கார​ர் அல்லது ஓ​ர் இஸ்லாமியர் வழித்தோன்றல் அல்ல என்றும்,/ அவர் இந்தியா, கேரளா வம்சாவளியினர் என்றும்/ மகா​தீரின் உண்மையான பெயர் மகா​தீர் த/பெ Islandar Kutty என்றும் / அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட், நாட்டின் துணைப்பிரதமராக 2017 ஆம் ஆண்டு பதவி வகித்த போது, அடையாள ஆவணத்துடன் பொதுவில் அம்பலப்படுத்தப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக துன் மகா​​​தீர் இந்த அவ​தூறு வழக்கை தொடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்