துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார்

.”இந்தியர்கள் இந்நாட்டுக்கு விசுவாசமற்றவர்கள். அதனால், அவர்களை மலேசியர்கள்’ என்று அழைக்கத் தகுதியற்றவர்கள் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது அண்மையில் இந்திய தொலைக்காட்சிக்கு அளித்து இருந்த தமது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

“இந்தியர்கள், மலாய்க்காரர்களைப் போல தங்களை முழுமையாக மாற்றிக்கொள்ளாமலே, இருப்பதினால், அவர்கள் இன்னமும் , இந்திய வம்சா வழிகளாகவே கருதப்பட்டு வருகிறார்கள். அதனால் அவர்கள் மலேசியர்களாக முடியாது” என்று துன் மகாதீர், அப்பட்டமாக அப்பேட்டியில் குற்றஞ்சாட்டி இருந்தார்.

துன் மகாதீரின் கருத்துக்கு எதிர்வினையாக, மலேசியத் தமிழர் தன்மானப் பேரியக்கத்தின் தலைவரும், பிரபல ஊடகவியளாருமான- முனைவர் பெரு.அ.தமிழ்மணி, கடும் எதிர்வினையாற்றலுக்கு, சமூகம் சார்ந்து செயல்பட வேண்டி, அதையொரு சட்டப் பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டுமென்று போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ராஸார்ய்டின் ஹுசேனை கேட்டுக்கொண்டுள்ளார்.

‘1856- லிருந்து இன்றைய கால வரைக்குமாக, மலேசிய இந்தியர்கள் 167- ஆண்டுகால வாழ்வியலை மலேசிய மண்ணில் தொலைத்து இருக்கிறார்கள்.

இந்தியர்களின் அந்த நீண்டகால வரலாற்றுப் பின்னணியை எவராலும் மறுக்கவே மறைக்கவோ முடியாது.அதனால் துன் மகாதீரின்- இத்தகைய எள்ளி நகையாடலால் கடுமையான கண்டனங்கள் நாடு முழுமையும்
எதிரொலித்துக் கொண்டிருந்தாலும் அவரின் பேச்சு அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதால், அது குறித்து போலீஸ் புகாரை, 30- க்கும் மேற்பட்ட சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி – ஞாயிற்றுக் கிழமையன்று, ,மாலை 4-00 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல் மாவடட போலீஸ் நிலையத்தில் ஒன்றுகூடி பரிந்துரையை அளிப்பதோடு, சமூக இயக்கங்களால் போலீஸ் புகாரையும் ஒருமித்துச் செய்யவேண்டியுள்ளது என்று தமிழ்மணி குறிப்பிட்டுள்ளார். .

இதையொட்டி அமைப்புகளின் பிரதிநிதிகளும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுத்திரள வேண்டுமென்று அழைக்கப்படுகிறார்கள்.

இதன் தொடர்பில் இயக்கங்கள் வாரியாக, முழுத்தரவுகளைப் பெறவேண்டி குறியீட்டுப் பாரமொன்று அனுப்பட்டு வருகிறது. அதைப்பெற்று, பூர்த்திச்செய்து விரைந்து அனுப்புமாறு இயக்கத் தலைவர்களை தமிழ்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புக்கு :-
இயக்கச்செயலாளர்
சிமு.விந்தைக்குமரன் 017-4661767,
உதவித்தலைவர்
த.பரமசிவம் 013-6116267,
துணைச்செயலாளர்
பெ.கோவிந்தசாமி 016-2207318,
செயலவை உறுப்பினர் செ.தினகரன் 012-3991512.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்