லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் மாசுப்படுவது தடுக்கப்பட்டது

சிரம்பான், லிங்கி நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயலாக்கத்தை பாதிக்கச்செய்யக்கூடிய இயந்திரத்தின் கறுப்பு எண்ணெய் கசிவு என்று நம்பப்படும் கறுப்பு நிறத்திலான திரவம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில் மாசுப்பாடு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் தொழில் முனைவர்கள், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் நேற்று அப்பகுதியில் களம் இறங்கி, விரிவான ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து அமலாக்கத் தரப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நீரில் மாசுப்பாடு ஏற்படுவது தடுக்கப்பட்டது.

இன்று அப்பகுதிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பனுடன் பார்வையிட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் /ம ்சுங்கை லிங்கி ஆற்றில் அந்த கறுப்பு எண்ணெய் கசிவு நேரடியாக கலப்பது துரித வேகத்தில் தடுக்கப்பட்டது மூலம் லிங்கி நீர் சுத்திரிப்பு மையம் நீர் மாசுப்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

இன்று காலை 8 மணி வரை அந்த நீர் சுத்திகரிப்பு மையம் 100 விழுக்காடு கொள்ளவுடன் செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து மாசுபாடு குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரடியாக பார்வையிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்