துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இஸ்ரேலிய பிரஜை நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

கோலாலம்பூர், ஏப்ரல் 11 –

ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட ஓர் இஸ்ரேலிய பிரஜை, நாளை வெள்ளிக்கிழமை காலையில் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

36 வயதுடைய அந்த இஸ்ரேலிய பிரஜை, மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டம், 7 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

அந்த இஸ்ரேலிய பிரஜை கைது தொடர்பில் பிடிபட்ட மேலும் 14 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் தெரிவித்தார்.

ஆறு துப்பாக்கிகளை அந்த இஸ்ரேலிய பிரஜையிடம் விற்பனை செய்ததாக நம்பப்படும் கோலசிலாங்கூரைச் சேர்ந்த 43 வயது அசிம் மொஹாமாட் யாசின் மற்றும் அவரின் துணைவியார் 41 வயது சாயாரிஃபா ஃபாராஹா சியேட் ஹுசின் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை கிள்ளான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்