பிரதான சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல்

ஷா ஆலாம், ஏப்ரல் 11 –

நோன்புப்பெருநாளின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் மாலை 5 மணி வரையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான லெம்பாகா லெபுராயா மலேசியா அறிவித்துள்ளது.

ஒன்பது பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன என்று அது குறிப்பிட்டுள்ளது. பேராவில் லெம்பா பெரிங்கின் முதல் தன்ஜோங் மாலிம் வரையிலும், ஸ்லிம் ரிவெர்லிருந்து பீடோர் வரையிலும், தாபா ர் ந் ர்லிருந்து குவா டெம்பூருங் வரையில் வாகனபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதேபோன்று கோப்பேங்கிலிருந்து சிம்பாங் பூலாய் வரையிலும், ஈப்போ உத்தாராவிலிருந்து சங்காட் ஜெரிங் வரையிலும், அலோர் போங்சுவிலிருந்து சுங்கை பாகாப் வரையிலும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

பினாங்கில் பெர்மாதாங் பாவூவிலிருந்து பெர்தாம் வரையிலும், கெடாவில் சுங்கைப்பட்டாணியிலிருந்து அலோர்ஸ்டார் வரைகயிலும் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்