துப்பாக்கி சூட்டுக்கு பிறகு e-scooter -களை பயன்படுத்த திட்டம்

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான டெர்மினல் 1 – யில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் இலகுவாக ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதற்கான செலவுகளை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகவும் நாட்டில் காவல்துறையினர் இத்தகைய உபகரணங்களை பயன்படுத்தி பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

இந்த ஸ்கூட்டர் விரைவில் கிடைக்க பெறுவதுடன், இதன்மூலம் போலீசார் வேகமாகவும், ரோந்து பகுதிகளில் விரைந்தும் செயல்பட முடியும் என்று ஹுசைன் ஓமர் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடப்பதை தடுப்பதற்கு இந்த மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்தும் திட்டம் ஒரு சிறந்த வழிமுறையாகும் என்று அவர் இன்று அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்