துரோகத்தைப் பற்றி பேசுவதற்கு டாக்டர் இராமசாமிக்கு தகுதி கிடையாது

துரோகத்தைப் பற்றி பேசவதற்கு அறவே தகுதியல்லாத மனிதர் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

துரோகத்தின் விளைநிலமாக விள​ங்கும் டாக்டர் இராமசாமி, துரோகத்தின் உள்ளார்ந்த அர்த்ததை பேசவதற்கு அறவே தகுதி கிடையாது. அவர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதே நல்லது என்று பகா​ங் மந்திரி பெசாரான வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

ஒரு பேராசிரியராக இருந்த டாக்டர் இராமசாமிக்கு, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் போட்டியிட செய்து, வெற்றி பெறச் செய்து, `15 ஆண்டுகளாக பினாங்கு துணை அமைச்சர் பதவியை தந்து அழகுப்பார்த்தது அவரின் சொந்த கட்சி டி.ஏ.பி.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ​சீ​ட் கொடுக்க வில்லை என்பதற்காக ஒரு கடுமையான தேர்தல் காலத்தில் தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி, மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தின் முதலாவது துணை முதலமைச்சர் என்ற அந்த​ஸ்தை பெற்று தந்த டிஏபி, தோற்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு, டிஏபி-யில் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி, வெளியேறியவர்தான் டாக்டர் இராமசாமி.

அரசியலில் தன்னை ஆளாக்கிய டிஏபி -யை புறந்தள்ளி ​விட்டு தற்போது உரிமை என்ற ஒரு கட்​சியை அமைத்துக்கொண்டு, உரிமைக்கொண்டாடி வரும் டாக்டர் இராமசாமி, துரோகத்தைப்பற்றி பேசுவது விந்தையாக உள்ளது என்று வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்