பள்ளி நாள்கட்டியை கொண்டுவருவதை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கபடும்

புதிய கல்வியாண்டு மறுபடியும் ஜனவரியில் தொடங்குவதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட பள்ளி நாள்காட்டி முறையை கொண்டுவருவதை குறித்து நாடாளுமன்றத்தின் இன்று விவாதிக்கப்படும்.

2024/2025 புதிய கல்வியாண்டுக்கான பள்ளி நாள்காட்டியை கல்வி அமைச்சகம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திட்டமிடத் தொடங்கியுள்ளதாக கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வியாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் செயல்பட தொடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய கல்வியாண்டு நாள்காட்டி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்வியை பி.என்-பரிட் புந்தார் முகமது மிஸ்பாஹுல் முனிர் மஸ்துகி அவர்களால் கேள்வி பதில் அமர்வின் போது கல்வி அமைச்சரிடம் சமர்பிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

அதே வேளையில், ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் கற்றலை செயல்படுத்த இடையூறாக இருக்கும் பாடத்திட்டத்தை குறித்து கல்வி அமைச்சர் மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு தனது கருத்தை முன்வைக்க போவதாக பிஎன்-பாலிங், ஹசன் சாத் வலியுறுத்தினார்.

15 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டம் மார்ச் 27 ஆம் தேதி வரையில் 19 நாட்களாக நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்