தேசிய பாதுகாப்பு அமைப்பை ஹேக் செய்ய ஒரு நாளைக்கு 3,000 முயற்சிகள்

ஜோகூர், மார்ச் 31 –

தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 3,000 சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் காலேட் நோர்டின் நேற்று தெரிவித்தார்.

பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா தனது நிலைபாட்டை தெரிவித்த பிறகு பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளபட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக Johor, Ulu திராம் , இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த ரமடான் நிகழ்ச்சிக்கு பின் காலேட் நோர்டின் இதைக் குறிப்பிட்டார்.

ஹெக்கெர் கள் நுழைவதன் வாயிலாக நாட்டில் பாலஸ்தீன பிரச்னைக்கள் மற்றும் பிற விஷயங்களை சார்ந்து கலந்துரையாடப்படும் அனைத்தையும் அவர்களால் கண்காணிக்க முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆறு கைத்துப்பாக்கிகள் உட்பட 200 தோட்டாக்கள் வைத்திருந்த இஸ்ரேலியா ஆடவரை கைது செய்யபட்டதை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பு கட்டுபாடுகளை அதிகரித்துள்ளதாக காலேட் நொர்டின் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்