வைரலான காணொளி 3R விவகாரத்தை எதிர்கொள்ளும் பட்லினா சீடேக்

கோலாலம்பூர், மார்ச் 31 –

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தம்மை சார்ந்த காணொளி ஒன்று ஒருமித்த கருத்துகளுக்கு புறம்பாக இருப்பதுடன் தமது மேல் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இருப்பதாக கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.

அந்த காணொளி மதம், இனம் மற்றும் அரசனின் அமைப்பு குறித்த 3R விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் உண்மையான அர்த்தத்தை உணராமல் அதுக்குறித்து போலியான தகவல்களை வெளியிடுவது அவரின் மேல் கொண்டிருக்கும் குற்றசாட்டுகளையும் அவதூறுகளையும் அதிகரிப்பதுடன் அவரின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக பட்லீனா சீடேக் அவரின் முகநூல் அகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பிடப்பட்ட காணொளி ஒரு குழுவினருடனான தனிப்பட்ட சந்திப்பில் எடுக்கப்பட்டத்துடன் இது சர்ச்சை மற்றும் அவதூறு உருவாக்கவே பரப்பப்பட்ட ஒரு தகவலாகும் என்றார் அவர்.

வீட்டில் காபீர் என்ற சொல்லை தனது பிள்ளைகளுக்கு பயன்படுத்த ஒருபோதும் அனுமதித்ததில்லை என்பதுடன் இந்த காணொளி எந்தவொரு தரப்பினரையும் புண்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாக பட்லீனா சீடேக் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்