தொகுதி எல்லை மறுசீரமைப்பை அரசியல் கட்சிகள் தீர்மானிக்க முடியாது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25-

நாட்டில், தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பை தீர்மானிப்பதற்கான அதிகாரம், அரசியல் கட்சிகளுக்கு துளியும் கிடையாது என செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் தெரிவித்தார்.

தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அணுகுமுறையில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே இணக்கம் காணப்பட வேண்டும் என பெரிக்காதான் நசியனாலைச் சேர்ந்த இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் அப்துல்லா வலியுறுத்தியிருந்தது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

சம்பந்தப்பட்ட பரிந்துரைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உடன்படுமாயின், பின்னர் எங்கிருந்து அதற்கான அனுமதியைப் பெறுவது என்ற கேள்வியை முன்வைத்த வில்லியம் லியோங், சைப்புடின் அப்துல்லா முதலில் கூட்டரசு அரசியலைமைப்பு சட்டத்தை முறையாக படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அந்த சட்டத்தின் படி, தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை, வில்லியம் லியோங் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்பு, பெர்சே அமைப்பின் கருத்தரங்களில் கலந்துக்கொண்டிருந்த சைப்புடின் அப்துல்லா, நடப்பிலுள்ள தொகுதி எல்லை வரையறை, குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டியதோடு, அவற்றில், மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்