தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளித்ததால் விபத்து ஏற்பட்டது

பத்து பஹாத், ஏப்ரல் 01 –

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 116.9 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்க அவசர பாதையில் அக்கார் நிறுத்தப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, 35 வயதுடைய முஹம்மத் பாரெட் சக்கரியா, ஆயேர் ஹித்தாம்-மிலிருந்து பாகோஹ்-விற்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்ததாக பத்து பஹாத் மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் சுப்பரின்டென்டான் ஷாஹ்ரூல்லணுவார் முஷாடாட் அப்துல்லாஹ் சனி கூறினார்.

பாதிக்கப்பட்ட ஆடவர் அக்காரை தவிர்க்க முற்பட்ட வேளையில் அதன் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவரின் இரண்டு கைகளும் முறிவுற்றதாக ஷாஹ்ரூல்லணுவார் முஷாடாட் விவரித்தார்.

அவ்வாடவர் மூவாரில் உள்ள பாக்கார் சுல்தானாஹ் பாட்டிமாஹ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்த வேளையில் அக்கார் ஓட்டுநர் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக ஷாஹ்ரூல்லணுவார் முஷாடாட் மேலும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்