நஜீப்பிற்கு சிறையில் சிறப்பு சலுகை

கோலாலம்பூர், மார்ச் 28 –

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிய போதிலும் அதனை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அது நம்ப முடியாத தகவலாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால், லஞ்ச ஊழல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நஜீப்பிற்கு உண்மையிலேயே வெகு சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் சொற்பொழிவாளர் வான் ஜி வான் ஹூசின் கூறுகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானுடன் தொடர்புபடுத்தப்பட்ட நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தனது சிறைவாசத்தை முடித்து விட்டு கடந்த மார்ச் 22 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட வான் ஜி , முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதை நேரில் பார்த்தாக உள்ளூர் அகப்பக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மற்ற கைதிகளைப் போல் நஜீப், சிறைச்சாலை சீருடையை அணிவதில்லை. வீட்டில் உடுத்தும் ஆடையைதான் அணிந்து இருக்கிறார். அது கோர்ட் சூட் அல்ல. இயல்பான மனிதரைப் போல தனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை தவிர மற்ற நேரங்களில் அவருக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடத்தில் நஜீப் உள்ளார்.

நஜிப்பிற்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. மிக மிகச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை மற்ற கைதிகளுக்கு கிட்டாதவாகும். அனுதினமும் நஜீப்பை பார்ப்பேன், ஆனால், பேச முடியாது. எனது வழக்கறிஞர்கள் என்னை பார்ப்பதற்கு வரும் போது, பிரத்தியேக இடத்திற்கு செல்லும் போது நஜீப்பின் பார்ப்பது உண்டு என்று வான் ஜி தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்