நஜீப்பை முன்மாதிரியாக கொண்டு இந்திய மாணவர்களுக்கு METRICULATION-னில் இடமளிப்பீர்!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26.

B40 தரப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் METRICULATION-னில் ஈராயிரத்து 200 இடங்களை ஏற்படுத்தி தந்தது போல, நடப்பு அரசாங்கமும் அந்த கல்வி வாய்ப்பை வழங்க வேண்டும்.

அந்த முயற்சி இந்திய சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த வாய்ப்பு எவ்வித சிரமங்களும் இன்றி அமல்படுத்தப்படுவது அவசியம் என டத்தோ ஸ்ரீ நஜிப்-பின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்த இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு – SEDIC-க்கின் முன்னாள் தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ ன்ஸ் ராஜேந்திரன் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டிலேயே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அதுவொன்றும் புதிதானது அல்ல. METRICULATION-னில் பயிலும் வாய்ப்பு இந்திய ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், அங்கு பயின்ற பிறகு பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியைத் தொடருவார்கள். நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைத்த பிறகு, அவர்களால் இந்திய சமூகம் மேம்படும் என அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்