பாலியல் தொந்தரவை வழங்கிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26.

மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவை வழங்கியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஆசிரியரை கல்வியமைச்சு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அவருக்கு பதிலாக மாற்று ஆசிரியரை நியமிக்க வேண்டுமென பேஜ் எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுவின் தலைவர் நூர் அசிமாஹ் ரஹீம் வலியுறுத்தியுள்ளார்.

இழிவுச்செயலில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளியில் தொடர்ந்து இருப்பதற்கும் அல்லது இதர பள்ளிகளுக்கு மாற்றப்படுவதற்கும் அனுமதியளிக்கக்கூடாது.

பணியிலிருந்து நீக்கம் செய்யும் நடைமுறை கடினமானது என்பதால், நெறிமுறையை மீறிய சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தாம் தகவல் கிடைக்கபெற்றதாகவும், ஆசிரியர்களின் தேர்தல் வாக்குகள் மிக முக்கியம் என்பதால், அத்தரப்பினரின் கோபத்திற்கு ஆளாகுவதற்கு கல்வி அமைச்சர் பயப்படும் சாத்தியம் உள்ளதாகவும் நூர் அசிமாஹ் ரஹீம் கூறினார்.

சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கப்பட்டால், மாணவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை களைய முடியும். அது போன்ற தொந்தரவு இலக்கான மாணவர்களின் பாதுகாப்பு உரிய வகையில், உறுதிசெய்யப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்பு, மாணவர்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் முதலியோர், பணிநீக்கம் செய்யப்பட்டு சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார்கள் என கல்வியமைச்சர் பட்லினா சிடேக் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்