நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வருகையும் விவாதமும் கட்டுப்பாட்டில் இருத்தல் அவசியம் பிரதமர் அன்வார் நினைவுறுத்து

பெட்டாலிங் ஜெயா,பிப்ரவரி 25 –

நாளை தொடங்கவிருக்கும் 15 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் விவாதங்கள் அனைத்தும் ஏற்புடையதாகவும் தரமாகவும் இருப்பதை முன்னதாகவே உறுதி செய்து கொள்ளுமாறு பிரதமர் அன்வார் கேட்டு கொண்டார்.

இன்று, ஶ்ரீ பெர்டானா வில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்பாக விளக்கமளிக்கபட்ட போது அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த நினைவூட்டலை பிரதமர் அன்வார் வழங்கினார்.

இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் துணை பிரதமர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சைட் ஹமிடி மற்றும்டத்தோ ஶ்ரீ பாடிலா யூசோப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்படடுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்