நாட்டின் வளங்களை சூறையாடும் யாரையும் அரசாங்கம் தற்காக்காது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

நாட்டின் வளங்களை சூறையாடும் மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடும் யாரையும் அரசாங்கம் தற்காக்காது என்பதற்கு கோலாலம்பூர் மாநகரில் நில அடையாளத்தை தாங்கிய 60 மாடி MENARA ILHAM கோபுரத்தை பறிமுதல் செய்து இருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் நடவடிக்கை நிரூபித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பதவி, அந்தஸ்து, அதிகாரம் கொண்டிருந்த தனிநபர்கள் தங்கள் அதிகாரத்தை தவாறாக பயன்படுத்தி இருப்பார்களேயானால் அவர்களுக்கு எதிராக எஸ்.பி.ஆர்.எம் விசாரணை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் அந்த ஆணையத்திற்கு வழிவிட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் ஆட்சிக்காலத்தில் நீண்ட காலமாக நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த அவரின் நெருங்கிய சகாவான அம்னோ முன்னாள் பொருளாளர் துன் டாயிம் ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் அருகில் உள்ள 270 கோடி வெள்ளி மதிப்புள்ள ஆடம்பரமிக்க 60 மாடி கோபுரத்தை எஸ்.பி.ஆர்.எம் பறிமுதல் செய்து இருப்பது தொடர்பில் பிரதமர் அன்வாரிடம் கருத்து கேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வெளிநாடுகளில் உலக பெரும்புள்ளிகளின் சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பான Pandora Papers கடந்த 2021 ஆம் ஆண்டியில் வெளியிட்ட அறிக்கையில் துன் டாயிம் ஜைனுதீன் உட்பட மலேசியாவில் சில பெரும்புள்ளிகளின் சொத்து மதிப்பு வெட்ட வெளிச்சமானது.

அதேவேளையில் துன் டாயிம் நிதி அமைச்சராக இருந்த போது அரசாங்கத்திற்கு சொந்தமான 230 கோடி வெள்ளி நிதி முறைகேடு தொடர்பிலும் அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது.

Menara Ilham கட்டம் பறிமுதல், அது தொடர்பான விசாரணை என்பது பல்வேறு பரம ரகசியங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்