பிரதான நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தொடங்கியுள்ளதால் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இன்று மதியம் முதல் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் கடுமையானது. குறிப்பாக, கிழக்கு கரை மாநிலங்களுக்கு செல்லும் இரண்டு முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மதியம் 12 மணியளவில் தொடங்கியது.

நாளை டிசம்பர் 23 ஆம் தேதி முதன்மை நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இலவசம் என்பதால் போக்குவரத்து நெரிசல் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனமான Plus Malaysia Berhad, சிக்கல் நிறைந்த சில பகுதிகளில் Smart Lane எனப்படும் சிறப்பு வழித்தடங்களை திறந்துள்ளது.

இந்த சிறப்புத் தடங்கள் இன்று முதல் வரும் ஜனவரி முதல் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என்று அது அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்