நாட்டில் இரண்டாவது கேசினோ மையத்திற்கு இடமில்லை

தோஹா, மே 14 –

மலேசியாவில் இரண்டாவது கேசினோ சூதாட்ட மையம் நிர்மாணிக்கப்படுவதற்கு இடமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் தற்போதைய முழு கவனம், இலக்கவியல் உருமாற்றம், எரிசக்தி உருமாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை ஆகியவற்றை மேம்படுத்துவதே தவிர சூதாட்ட மையத்தை அல்ல என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

கட்டாருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், தலைநகர் தோஹாவில் அந்நாட்டின் பொருளாதார மன்றம் ஏற்பட்டிலான ஆய்வரங்கில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்