நில ஆர்ஜீதம் சமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கோலாலம்பூர், மே 15 –

கிளந்தான், தும்பாட்டையும், சிலாங்கூர், கோலக்கிள்ளானையும் இணைக்கும் ECRL எனப்படும் கிழக்குகரையோர ரயில் திட்ட நிர்மாணிப்புப்பணிக்கு சிலாங்கூர் மாநிலத்தில் தேவையான நிலங்களை எடுக்கும் பணிகள் சமூகமாக நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் பகுதியை இலக்காக கொண்டு நிலங்களை ஆர்ஜீதம் செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நிலங்கள், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

அதேவேளையில் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடுகள் கிடைப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்