நாட்டில் பதற்றம் நிலவினாலும் போலீஸ் தானாகவே விசாரணையை மேற்கொள்ளாதா?

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றால் போலீஸ் விசாரணையை மேற்கொள்ளாது எனும் கூற்று, நாட்டில் உண்மையில் அப்படியொரு சட்டம் இருக்கின்றதா? என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோ சயிட் இப்ராஹிம் கேள்வியை முன்வைத்துள்ளார்.

ஒருவேளை நாட்டில் பதற்றமான சூழல் நிலவினாலும் அது குறித்து புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், போலீஸ் தானாகவே முன்வந்து விசாரணையை மேற்கொள்ளாதா? எனவும் தனது X தள பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் அம்னோவின் உயரிய தலைவர் என்பதால், அவருக்கு எதிராக போலீஸ் விசாரணையை மேற்கொள்ளவில்லை என தாம் சந்தேகிப்பதாக கூறிய டத்தோ சயிட் இப்ராஹிம், அந்த நபர் யார் என்ற முழு தகவலை குறிப்பிடவில்லை.

அவர் அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ்-வை குறிப்பிட்டே அந்த பதிவை இட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

அல்லா சொல் கொண்ட காலுறை சர்ச்சை தொடங்கிய நேரத்தில் டாக்டர் அக்மால் சாலேஹ், வாள் கத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேள்விகள் எழுந்தன.

இந்நிலை குறித்து பதிலளித்திருந்த தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன், டாக்டர் அக்மால் சாலேஹ்-வுக்கு எதிராக புகார் ஏதும் பெறப்படவில்லை என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்