நான்கு தொழிற்சாலைகள் செயல்படாமல் இருக்க உத்தரவிடப்பட்டன

ஜொகூர், ஏப்ரல் 04-

ஜொகூரில் நான்கு தொழிற்சாலைகள் பரிந்துரைக்கப்பட்டபடி கழிவுநீர் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட திரவக் கழிவுகளை முறையாக நிர்வகிக்க தவறியதை தொடர்ந்து தற்காலிகமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களினால் நீர் தூய்மைக்கேடு ஏற்படுகின்ற அபாயம் இருப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

48 அதிகாரிகள் மற்றும் 17 அமலாக்கக் குழுக்களை உள்ளடக்கிய ஜொகூர், சுற்றுச்சூழல் துறை இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓப்ஸ் கெம்ப்புர் ராயா திடீர் சோதனையின் போது குறிப்பிடப்பட்ட நான்கு தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லிங் தியான் சூன் கூறினார்.

14 ஆறுகள் கழிவுப் பொருட்களினால் பாதிப்படையாமல் இருப்பதற்கும் நீர் தூய்மைக்கேட்டை தவிர்ப்பதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக லிங் தியான் சூன் மேலும் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்