நான்கு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது.

தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரம் பேரிலிருந்து 22 ஆயிரம் பேராக குறைந்த நிலையில், இந்த எண்ணிக்கை இன்று மாலையில் 20 ஆயிரத்து 036 பேராக குறைந்துள்ளது என்று தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA தெரிவித்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, ஜோகூர் மற்றும் பகாங் ஆகிய நான்கு மாநிலங்களே வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.
நேற்று வரையில் 92 ஆக இருந்த துயர் துடைப்பு நிவாரண மையங்களின் எண்ணிக்கை, இன்று மாலையில் 82 ஆக குறைந்துள்ளது என்று NADMA தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்