நான்கு வட்டி முதலைகளை போலீசார் கைது

சிலாங்கூர், மே 17-

சிலாங்கூர், ரவாங்-கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது ஹா லோங் எனப்படும் நான்கு வட்டி முதலைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீடு முறையான உரிமம் ஏதுமின்றி உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கு பணத்தை கடனாக வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஒருரிடமாகும் என்று வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

இதில் 22 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் உட்பட ஒரு வியட்நாம் பெண்ணிடமிருந்து 7 கைத்தொலைப்பேசிகள், ஒரு புத்தகம், வீட்டு சாவி, ஏடிஎம் அட்டைகள் உட்பட 5,650 வெள்ளி ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ராம்லி முகமது கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டி முதலைகள் தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர முறையில் கடனை வழங்கி வசூலிப்பதாக ராம்லி முகமது அறிவித்தார். ஒரு மாதத்திற்கு அந்த சிண்டிகேட்டுகள் 2 லட்சம் வெள்ளி வரையில் சம்பாறிப்பதாகவும் ராம்லி முகமது தகவல் வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று மற்றும் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்