வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்

தைப்பிங் , மே 17-

தைப்பிங் அருகிலுள்ள த்ராங், கம்போங் தெமர்லோஹ் -வில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த வீடொன்றில் மூதாட்டி ஒருவரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது 80 வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டி வீட்டிலுள்ள படுக்கறையில் படுத்திருந்த நிலையில் இறந்து கிடப்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாக பேராக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

இன்று காலை 9 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தைப்பிங் தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவியுடன் த்ராங் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சபரோட்ஸி நோர் அகமது கூறினார்.

பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மரண சம்பவம் எந்தவொரு குற்றச்செயலுக்கும் வெள்ளத்திற்கும் தொடர்புடையது இல்லை என்பதுடன் வயது முதிர்வு காரணமாக மட்டுமே அவர் இறந்திருப்பதாக சபரோட்ஸி நோர் அகமது குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்