நியமனக் கடிதங்களை மாமன்னர் வழங்கினார்

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் Batu Puteh தீவு உட்பட மூன்று தீவுகளின் இறையாண்மை தொடர்பான விவகாரம் கையாளப்பட்ட முறை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற வைபவத்தில் அரச விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி Tun Muhamad Raus Sharif தலைமையிலான ஆணையத்தின் உறுப்பினர்கள், மாமன்னரிடமிருந்து நியமன கடிதங்களை பெற்றுகொண்டனர்.

இந்நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman Said- டும் கலந்து கொண்டார்..

Batu Puteh, Batuan Tengah ( பத்துவான் தெங்கா), Tubir Selatan ஆகியவையே அந்த மூன்று தீவுகளாகும். Batu Puteh தீவு, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும் அந்த தீர்ப்பை எதிர்த்து மலேசியா மேல்முறையீடு செய்வது தொர்பில் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருந்தார்.

அதேவேளையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று எடுக்கப்பட்ட முடிவு தொடர்பில் அவ்விவகாரம் கையாளப்பட்ட முறை குறித்து கண்டறியவதற்கு இந்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்