விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்

கேமாமன், மே 18-

கேமாமன், கிஜால் அருகே கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை இரண்டின் 312.4 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மலேசிய Terengganu பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த வேளை, அவரின் மூன்று நண்பர்கள் படுங்காயத்திற்கு ஆளாகினர்.

நேற்று மாலை 5.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் 21 வயது முஹமட் ஃபதோல் ஹாரிஸ் முஹமட் அஸ்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் அதில் பயணித்த அவரின் சக தோழர்களான சுரேன் சந்தானசாமி, நோராமிரா சியாஹிரா அப்துல்லா உட்பட நூர் ஃபரா ஷகிரா முகமது ஹிஷாமுதீன் பலத்த காயத்திற்கு ஆளாகியதாக கேமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

பெரோடுவா அல்சா காரில் பயணித்த அந்த ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கார் தடம் புரண்டதில் அதில் பயணித்த சக நண்பர்களும் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதாக ஹன்யான் ரம்லான் கூறினார்.

விபத்தில் காயமுற்றவர்கள் அனைவரும் கேமாமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்