நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்படாது

பட்டர்வோர்த், மார்ச் 30-

தற்போது கோடை வெயில் கடுமையாகி வரும் வேளையில் நீர்த் தேக்கங்களில் நீரின் கொள்ளளவு, குறைந்து வருகிறது என்ற போதிலும் பினாங்கு மாநிலத்தில் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் திட்டம் கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் சோவ் கொண் யியோவ் தெரிவித்துள்ளார்.

வரும் ஹரிராயா பெருநாள் உட்பட குறிப்பிட்ட காலம் வரையில் மக்கள் பயன்பாட்டிற்கான போதுமான குடிநீர் கொள்ளளவை மாநில அரசாங்கம் கொண்டு இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

தற்போது பினாங்கு மாநிலத்தின் பிரதான நீர்த்தேக்கமான ஆயேர் ஹித்தாம்- மில் நீரின் மட்டம் 34.1 விழுக்காடு வரை குறைந்து, மோசமான நிலையை எட்டிய போதிலும் அது, மாநில நீர் பயனீட்டாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய வல்லதாக உள்ளது.

எனவே மாநில மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று என்று சோவ் கொண் யியோவ் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்