நீர் விநியோகத் தடை கிளந்தானில் சீராகி வருகிறது

பாசிர் மாஸ், ஏப்ரல் 02 –

கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் வழக்கம்போல் இயங்க தொடங்கியதை அடுத்து, நேற்று முதல் கிளந்தானில் நீர் விநியோகம் சீராகி வருவதாக தெரியவந்துள்ளது.

அனைத்து தரப்பினரிடமிருந்து கிடைக்க பெற்ற பங்களிப்பின் மூலம் இப்பகுதியில் நீர் பிரச்னையை சமாளிக்க முடிந்ததாக கிளந்தான் பொதுப்பணி, உள்கட்டமைப்பு, நீர் மற்றும் புறநகர் மேம்பாட்டின் எக்ஸ்க்கோ டத்தோ டாக்டர் ஈசானி ஹுசைன் கூறினார்.

முன்னதாக வறண்ட காலநிலையின் காரணமாக கெலார், பாசிர் மாஸ் -சில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இதனால், அக்குடியிருப்புவாசிகள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு ரேஷன் குடிநீரை விநியோகித்ததுடன் மினெரல் நீரை வாங்கி பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்