வெ.400,000 மதிப்பிலான பன்றி இறைச்சி பறிமுதல்

ஜொகூர், Pasir Gudang துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 400,000 வெள்ளி மதிப்பிலான இறக்குமதி செய்யப்பட்ட 25 டன் பன்றி இறைச்சியை ஜொகூர், மலேசிய நோய் தடுப்பு, சோதனை சேவை இலாக (Maqis) கைப்பற்றியது.

நேற்று மாலை 6 மணியளவில் செபனியோலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சியை கொண்டு வந்த கொள்கலனை சோதனையிட்ட போது பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர், மலேசிய நோய் தடுப்பு, சோதனை சேவை இலாகவின் இயக்குநர் Edie Putra Md Yusof தெரிவித்தார்.

இச்சோதனையின் போது இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சியின் பேக்கேஜில் label எதுவும் வைக்கப்படாததுடன் இறக்குமதிக்கான நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டதாக Edie Putra கூறினார்.

ஒவ்வொரு இறைச்சியின் பேக்கேஜிலும் பெயர், முகவரி, திகதி, ஆகியவை அவசியம் வைக்கப்பட வேண்டும் என்று இறக்குமதி நிபந்தனைக்களுக்கு கீழ் உள்ளதாக Edie Putra இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்