நோக்கத்தை குறித்து இருவர் மீது போலீசார் தொடர்ந்து விசாரணை

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிமில் உள்ள இஸ்தானா நெகாராவிற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்திக்க வேண்டும் என்று கூறி நுழைய முயற்சித்த இரு நபர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, அவர்களின் உண்மையான நோக்கத்தை ஆராய போலீசார் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குறிய இரு நபர்களின் செயல்களுக்கு பின்னால் மறைந்திருக்குக்கூடிய காரணத்தை அடையாளம் காண போலீசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியளவில் அரண்மனையின் 3 ஆவது நுழைவாயிலில் புரோடுவா கெம்பாரா ரக காரில் நுழைவதற்கு முயற்சி செய்த 29 மற்றும் 37 வயதுடைய நபர்கள் வளைத்து பிடிக்கப்பட்டதுடன் அந்த காரிலிருந்து வெட்டுக்கத்திகளையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள், 1958 ஆம் ஆண்டு அபாயகர வெடிப்பொருள் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்