நோன்பு பெருநாளை முன்னிட்டு 302 இடங்களில் ரஹ்மா விற்பனை திட்டம்

ஷாஹ் அலாம், ஏப்ரல் 05-

நோன்பு பெருநாளை முன்னிட்டு மக்களுக்கு உதவும் முயற்சியாக நாடு தழுவிய நிலையில் 302 இடங்களில், ரஹ்மா விற்பனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சந்தை விலையைக் காட்டிலும் 30 விழுக்காடு சிறப்பு விலை கழிவுடன் அடிப்படை உணவு பொருட்கள் அத்திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ அர்மிசன் மோஹட் அலி தெரிவித்தார்.

பாயுங் ரஹ்மத் மதானி-யின் கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள ரஹ்மா விற்பனை திட்டம் நேற்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வரையில் நடத்தப்படும். உலர்ந்த பொருள்களுடன் கோழி, அரிசி, மாட்டிறைச்சி முதலானவை அதில் விற்கப்படுகின்றது.

ரஹ்மா விற்பனை திட்டம் நடத்தப்படுகின்ற இடம் குறித்த தகவல்களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின மீதான அமைச்சின் www.kpdn.gov.my அகப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் என டத்தோ அர்மிசன் மோஹட் அலி வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்