மித்ராவை மாற்றான்தாய் பிள்ளையைப் போல் நடத்துவதா?

கோலாலம்பூர் ஏப்ரல் 4 –

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவை ஒரு மாற்றான்தாய் பிள்ளையைப் போல அரசாங்கம் வழிநடத்தி வருவதாக கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமைத் துறை அமைச்சுக்கும், பின்னர் ஒற்றுமைத்துறை அமைச்சிலிருந்து பிரதமர் துறைக்கும் மித்ரா பந்தாடப்பட்டு வருவது, மித்ரா விவகாரத்தில் அரசாங்கத்தின் உறுதியற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது என்று Charles Santiago குறிப்பிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இரு வெவ்வேறு அமைச்சுகளுக்கு இடையில் மித்ரா பந்தாடப்பட்டு வருவது மலேசிய இந்தியர்களை அவமதிக்கும் செயலாகும் என்று Charles Santiago தெரிவித்தார்.

ஒரு வளர்ப்புப்பிள்ளையைப் போல் மித்ரா நோக்கப்படுகிறது, . நடத்தப்பட்டு வருகிறது. இந்தியர்களின் அந்த உருமாற்றுப்பிரிவை எந்தவொரு அமைச்சும் உரிமையாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

அரசாங்கம், இது போன்ற உறுதியற்ற நிலைப்பாட்டைக் கொண்டு இருக்குமானால், மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் என்று Charles Santiago நினைறுத்தினார்.

இரு அமைச்சுகளுக்கு இடையில் மித்ரா அடிக்கடி பந்தாடப்பட்டு வந்தால் இந்திய சமூகத்தில் B40 தரப்பினருக்கு உதவ வேண்டும் என்ற அதன் உன்னதக செயல்பாட்டிலும், திட்டங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று Charles Santiago எச்சரித்துள்ளார்.


WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்