நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை சிலாங்கூர் அரசாங்கம் ரத்து செய்யவில்லை

சிலாங்கூர், ஏப்ரல் 25-

சிலாங்கூர், பத்தாங் காளி-யிலுள்ள பூசாட் பெர்டகாங்கன் அரா-வில், தாங்கள் நிகழ்ந்த திட்டமிட்டிருந்த பெர்சத்து கட்சியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை, மாநில அரசாங்கம் பயத்தின் காரணமாக ரத்து செய்ததாக, சிலாங்கூர் பெரிக்காதான் நசியனால் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி வன்மையாக மறுத்தார்.

அந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இடம் மிக குறுகலானது என்பதால், அதைவிட பெரிய இடமான புக்கிட் சென்டோசா-விலுள்ள இரவு சந்தையின் தளத்தில் அதனை நிகழ்த்த, மாநில அரசாங்கம் ஊராட்சி மன்றத்தின் வாயிலாக பரிந்துரைத்திருந்தது.

ஆனால், அந்நிகழ்ச்சியை அங்கு நடத்துவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். அதன் பிறகு, தாங்கள் பெரிக்காதான் நசியனால் மீதான பயம் காரணமாகவே, பத்தாங் காளி-யில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்த அனுமதிக்கவில்லை என சில நாட்களுக்கு முன்பு, அஸ்மின் அலி கூறியுள்ளார். அவர் எந்த இடத்தில் அந்நிகழ்ச்சியை நடத்தியிருந்தாலும் சரி, நிச்சயமாக மாநில அரசாங்கத்திற்கு எதிராகவே பேசியிருப்பார் என அமிருதீன் ஷாரி சாடினார்.

நேற்று நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அமிருதீன் ஷாரி அதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்