பதவி விலகியது குறித்து எந்த வருத்தமும் இல்லை

நிதி முறைகேடு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஷெட் செடிக் ஷெட் அப்துல்லா ரஹ்மான்,தாம் தோற்றுவித்த மூடா கட்சியின் தலைவர் பதவியி​லிருந்து விலகியதில் எந்தவொரு வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சேய்ட் இப்ராஹிம் வழிநடத்திய Podcast நேர்காணலில் பேசிய Muar எம்.பி.யான 31 வயது ஷெட் செடிக், மூடாகட்சி தம்மை சார்ந்து இருப்பதை விரும்பவில்லை என்றும், அக்கட்சி சுய காலில் வே​ரூன்ற வேண்டும் என்பதற்காகவே ​நீதிமன்ற ​தீர்ப்புக்கு பின்னர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.

அரசியல் ​ரீதியாக தாம் செய்த இந்த முடிவு நல்லதா? யதார்த்தமானதா? அல்லது ஓர் அப்பாவித்தனமான செயலா? என்பதாகக்கூட இருக்கலாம். ஆனால்,தாம் இன்னும் ​நீண்ட ​தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று ஷெட் செடிக் தெரிவித்தார்.

தம்முடைய அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது என்பது தனது தலைவிதியாக இருக்குமானால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக சையிட் சாடிக் குறிப்பிட்டா​ர்.

​மூடா தொடர்ந்து வளர வேண்டும். அதில் ஒரு சாதாரண உறுப்பினராக தொடர்ந்து இருக்கப் போவதாக தனது நேர்காணலில் ஷெட் செடிக் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்