பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன

கோலாலம்பூர், மார்ச் 29-

கோலாலம்பூர்-ரில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள் சாய்ந்ததில் சுமார் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன.

அவ்விபத்தில் யாரும் காயங்களுக்கு இலக்காகவில்லை என கோலாலம்பூர்-ருக்கான தீயணைப்பு மீட்பு படையின் தொடர்பாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6 வாக்கில் பெய்யத் தொடங்கி கன மழை சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்ததால் மரங்கள் வலுவிழந்து சாய்ந்தது.

அதில், புக்கிட் ஜாலீல் நெடுஞ்சாலையில் 5 வாகனங்களும் தாமான் தாஸிக் டாமாய்-யில் இரு வாகனங்களும் ஸ்ரீ பெட்டாலிங்-ங்கில் 5 வாகனங்களும் சேதமடைந்தன.

பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் தாமான் சாலாக் செலாத்தான்-னில் மரங்கள் சாய்ந்ததில் இரு வீடுகள் சேதமுற்றன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்