மித்ரா ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டதில் டத்தோ ரமணன் அஞ்சி நடுங்குவது ஏன்?

கோலாலம்பூர், மார்ச் 28 –

வறுத்து எடுக்கின்றனர் வலைவாசிகள்

இந்தியர்களின் சமூகவில் உருமாற்றுப்பிரிவான மித்ரா, பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டதில் அதன் முன்னாள் சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ ர். ரமணன், அஞ்சு நடுங்குவது ஏன்? என்று சமூக வலைத்தளங்களில் வலைவாசிகள் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர்.

மித்ரா, பிரதமர் துறையில் இருந்தால் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் மித்ராவும், இந்திய சமூகமும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று வாதிடும் ரமணன், கடந்த ஓராண்டு காலமாக மித்ரா, பிரதமர் துறையில் இருந்த போது, எத்தகைய வசதிகளையும், வாய்ப்புகளையும் இந்திய சமூகத்திற்கு முழுமையாக பெற்றுத் தந்தார் என்பதை விளக்க முடியுமா? என்று அவர்கள் வாதிடுகின்றனர்..

மித்ரா, ஒற்றுமைத்துறை அமைச்சில் இருக்கக்கூடாது, பிரதமர்துறையில்தான் இருக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்து இருக்கும் ரமணன் , தமது பி.கெ.ர் கட்சியை சேர்ந்த சரஸ்வதி கந்தசாமி துணை அமைச்சராக இருக்கும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சில், மித்ரா ஏன் இருக்கக்கூடாது என்பதற்கு தெளிவான விளக்கங்களை தர வேண்டுமே தவிர பாவப்பட்ட சமூகம், பரிதவிக்கக்கூடாது என்று இந்திய சமூகத்தை காரணம் காட்டி, நீலிக் கண்ணீர் வடிக்கக்கூடாது.

தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் இலாகா, மற்றொரு அமைச்சுக்கு மாற்றப்படும் போது, ஊழல் புரிந்தவர்கள் மட்டுமே பயப்பட வேண்டும். எங்கே தாங்கள் புரிந்த ஊழல்களை தோண்டி எடுத்து விடுவார்களோ என்று அஞ்சி நடுங்க வேண்டும்.

ஒரே வருடத்தில் மித்ராவின் 10 கோடி வெள்ளியையும் நேர்மையாக சமூகத்திற்கே ஒதுக்கி கொடுத்து விட்டதாக அறிவித்து இருக்கும் ரமணன், மித்ராவை ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டதில் எதற்காக பயப்படுகிறார்? அஞ்சி நடுங்குகிறார்? என்று அந்த துணை அமைச்சரை நேற்று முதல் வலைவாசிகள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்