பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 44 பேர் கைது

நெகிரி செம்பிலான், மார்ச் 20 –

நீலாய்லுள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று மேற்கொண்ட திடீர் சோதனையின் போது நாட்டில் சட்டவிரோதமாக குடிநுழைந்த வெளிநாட்டவர்களை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

இந்நடவடிக்கையில் மொத்தம் 149 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் சட்டவிரோதமாக குற்றங்களை புரிந்த 44 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 21 அதிகாரிகள் உட்பட நெகிரி செம்பிலான் இஸ்லாமிய மத விவகாரத்துறையை சார்ந்த 18 அதிகாரிகளும் ஈடுபட்டதாக நெகிரி செம்பிலான், மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் கெனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.

22 குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட Ops Mahir, Kutip dan Bersepadu சோதனையின் மூலம் இந்த 44 பேர் கைது செய்யப்பட்டதாக கெனித் தான் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் 24 முதல் 48 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்