பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 20 சமான்கள் வெளியிடப்பட்டன

கோலாலம்பூர், ஏப்ரல் 7 –

புக்கிட் அம்பாங் சௌஜானாவில் மேற்கொண்ட அதிரடி சோதனையின் மூலம் 20 சமான்கள் வெளியிடப்பட்ட வேளையில் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 11 மணி முதல் விடியற்காலை 3 மணி வரையில் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்க பிரிவின் மூத்த அதிகாரி உட்பட 14 உறுப்பினர்கள் இச்சோதனையில் ஈடுபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமாட் இஸ்மாயில் கூறினார்.

இதில் ஆறு நபர்களுடனான வாகனங்கள் சோதனை செய்யபட்டதுடன் ஓட்டுநர் உரிமம் இல்லாத, மாற்றியமைக்கப்பட்ட எக்சோஸ், போலியான பதிவு எண் மற்றும் பிற குற்றங்களுக்காக மொத்தம் 20 சமான்கள் வெளியிடப்பட்டதாக மொஹாமாட் அசாம் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்தார்.

மேல் நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அம்பாங் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக மொஹாமாட் அசாம் தகவல் வெளியிட்டார்.

நோன்பு பெருநாள் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பயனர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது மட்டுமின்றி பிள்ளைகள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கண்டிக்குமாறு மொஹமாட் அசாம் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்