60 ஏ.பி.ம் உறுப்பினர்கள் 24 மணி நேர சேவை வழங்க தயார்

கெடா, ஏப்ரல் 7 –

கெடாவின் மலேசிய பொது தற்காப்பு படையான ஏ.பி.ம் அய்டிபித்ரி பெருநாளை முன்னிட்டு ஓப்ஸ் பீரிஹாத்தின் திடீர் சோதனைக்கு மொத்தம் 60 உறுப்பினர்களை பணிக்கு அமர்த்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இச்சோதனை நேற்று முதல் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் அமல்படுத்தப்படுவதுடன் மக்களின் பாதுகாப்பையும் அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கெடா, மலேசிய பொது தற்காப்பு படையின் இயக்குநர் லெப்டனன் கோலீனெல் சைரில் அன்வார் சுல்முஜி கூறினார்.

முதல் கட்டம், ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று சைரில் அன்வார் தகவல் வெளியிட்டார்.

பெருநாள் காலத்தில் விபத்து அல்லது சேதம் ஏற்படும் வாகனங்களுக்கும் பயனர்களுக்கும் முதலுதவி வழங்குவதற்கு குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் பணிக்கு நியமித்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்