பள்ளிவாசலில் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்ட வயோதிகப் பெண் கைது

பினாங்கு, மார்ச் 19 –

பினாங்கு, ஜோர்ஜ் டவுன், பாத்து பெரிங்கிகிலுள்ள ஜாமேக் ர்.ரஹ்மான் பள்ளிவாசலில் உள்ளே நுழைந்து, அங்குள்ளவர்களிடம் ஆவேசமாக நடந்துக்கொண்ட பெண்ணைப் போலீஸ் கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட வயோதிக பெண்ணை, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில், நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு அவர் விசாரணைக்காக தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக தீமுர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ராஸ்லாம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

அந்த வயோதிக பெண்ணுக்கு எதிராக 7 போலீஸ் புகார்கள் பெறப்பட்டிருக்கும் வேளையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகின்றது. அதன் காரணமாக, அவர் மனநல மருத்துவ நிபுணரிடம் கொண்டு செல்லப்படும் வேளை, தற்போதைக்கு விசாரணை தொடர்வதாக, ராஸ்லாம் அப்துல் ஹாமிட் கூறினார்.

சம்பந்தப்பட்ட முதியவர், தங்களிடம் தகறாரில் ஈடுபடுவது இது மூன்றாவது முறையென பள்ளிவாசல் தரப்பு தெரிவித்துள்ளது.

இரவு நேர தொழுகையின் போது, ஒலிப்பெருக்கியின் சத்தம் உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களுக்கு தொந்தரவை வழங்குவதாக கூறி, அப்பெண் அவ்வாறு நடந்துக்கொள்வதாக, அத்தரப்பு கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்