53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் துன் மகாதீர் IJN – னிலிருந்து வெளியேறினார்

கோலாலம்பூர், மார்ச் 18 –

கிருமி தொற்று காரணமாக 53 நாட்கள் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN – னில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து IJN -னில் சிகிச்சைப் பெற்று வந்த துன் மகாதீர் முகமது உடல்நலம் தேரிய நிலையில் அந்த இருதய சிகிச்சை கழகத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

98 வயதான துன் மகாதீர் இருதயத்தில் கிருமி தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற வேண்டி இருந்தது என்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமது முகநூலில் பதிவேற்றம் செய்த செய்தியில் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

தாம் பூர்ணக்குணமாகுவதற்கு பிராத்தனை செய்தவர்களுக்கு துன் மகாதீர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்