”வாட்சப்” விவாகரத்து, காரை சேதப்படுத்திய பெண்ணுக்கு அபராதம்

திருமணமாகி மூன்று மாதங்களுக்கு பிறகு, ”வாட்சப்” ‘talak 3’ – யின் மூலம் விவாகரத்து செய்ததை தொடர்ந்து தனது முன்னாள் கணவரின் காரை சேதப்படுத்திய குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை அல்லது 1,000 வெள்ளி அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

‘டத்தோ’ பட்டம் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான அப்பெண்ணின் முன்னாள் கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதன் விளைவாக அவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வாட்சப்-யில் விவாகரத்து செய்ததாக தெரியவந்துள்ளது.

அந்நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி வாட்சப்- ‘talak 3’ -யில் விவாகரத்து செய்தியை அனுப்பியதுடன் முன்னாள் மனைவி அவருக்கு சொந்தமான வங்கி கணக்கு அட்டையை திருடியதாக காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து, அப்பெண் ஆத்திரமடைந்து முன்னாள் கணவரின் BMW 530 ரக வாகன கண்ணாடியை சேதப்படுத்திய குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்