பிரதமர் சமமான ஒதுக்கீட்டு தொகையை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வழங்க வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 24 –


2019- ஆம் ஆண்டில் எதிர்கட்சியான பக்காத்தான் ஹாராபான் னுக்கு அப்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த 35 லட்ச நிதி ஒதுக்கீட்டை போன்று, மடானி அரசாங்கம் தற்போதைய எதிர்க்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என பெரிக்காத்தான் னெசியோனல் லைச் சேர்ந்த Hulu Terengganu நாடாளுமன்ற உறுப்பினர் ரொஒசோல் வாஹிட் கோரிக்கை விடுவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களின் நிர்வகிப்பு செலவுகளுக்காக ஆண்டுக்கு ஒருமுறை ஒதுக்கப்படும் கூடுதல் தொகையுடன் சேர்த்து, அந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்றார்.

20 லட்சம் ரிங்கிட் தொகுதி மேம்பாட்டிற்கும் 15 லட்ச ரிங்கிட் தொகுதி நிர்வகிப்புக்கான செலவுகள், நன்கொடைகள், நிதியுதவி முதலானவற்றுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும்.
அதன் வழி, தொகுதியிலுள்ள ஏழைகள், தனித்து வாழும் தாய்மார்கள், சாலை சீரமைப்பு முதலானவற்றிற்கு பயன்படுத்த முடியும் என ரோசோல் வாஹிட் கூறினார்.

இதற்கு முன்பு, துணைப்பிரதமர் டத்துக் ஶ்ரீ பட்சிலா யூசோப் ப்பிடமிருந்து எதிர்க்கட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த உடன்படிக்கை வரைவை தான் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்துக் ஶ்ரீ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

இந்நிலையில் அது குறித்து விவாதிக்க இதுவரையில் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ரோசோல் வாஹிட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்