பாடு தள உருவாக்கம் ஒரு தோல்வி

கோலாலம்பூர், மார்ச் 24 –


நாட்டின் முதன்மை தரவு தளமான பாடு வின் பலவீனம், பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி யின் தோல்வியை புலப்படுத்துவதாக அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் மொகமாட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.

தோல்வியைக் கண்டுள்ள பாடு தரவு தளம் குறித்து அமைச்சரவையில் விளக்கம் அளிக்கும்படி பிரதமர் டத்துக் ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , ரபிசி ரம்லி யைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சரவாக் அரசாங்கம் நேரடியாகவே அந்த தளம் குறித்து தங்களின் எதிர்மறையான கருத்தை முன்வைத்துள்ளது.

இதனால் மக்கள் நலன் உதவிகள் தாமதமாகி மீண்டும் குளறுபடிகள் ஏற்படுகின்றனவா? எனவும் மொகமாட் புவாட் சர்காஷி அவரது முகநூல் பதிவில் வினவி் உள்ளார்.

இதற்கு முன்பு, பாடு தளத்தில் கோரப்படும் தனிநபர் சார்ந்த தரவுகளில
மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென சரவாக் வலியுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்